போரை விரும்பவில்லை; பேச்சு நடத்த தயார்: இம்ரான் கான் அழைப்பு

  Newstm Desk   | Last Modified : 27 Feb, 2019 04:50 pm
pakistan-pm-imran-khan-invites-india-for-peace-talk

‛‛இந்தியா - பாக்., இடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் அதிகரித்தால், யார் முயன்றாலும் அதை நிறுத்த முடியாது. இந்தியாவுடன் போர் புரிய விரும்பவில்லை; அமைதி பேச்சுக்கு தயாராக இருக்கிறோம்’’ என, பாக்., பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். 

இது குறித்து, பாக்., பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது: ‛‛ போரை யார் துவங்குகிறோம் என்பது முக்கியமல்ல; அது எங்கு சென்று முடிகிறது என்பது தான் முக்கியம். இரு நாடுகளிமும் உள்ள ஆயுதங்களால் இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது. 

நம்மிடையே இருக்கும் பிரச்னைக்கு பேச்சு நடத்தி தீர்வு காண்பதே சிறந்தது. எனவே, நான் மீண்டும் ஒரு முறை, அமைதி பேச்சு நடத்த இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கிறேன். பேச்சு நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது’’ என அவர் கூறியுள்ளார். 

இந்நிலையில், ‛‛எந்த சூழலையும் எதிர்கொள்ள பாக்., ராணுவம் தயாராக இருக்க வேண்டும்’’ என, அந்நாட்டு ராணுவத்திற்கு பாக்., பிரதமர் இம்ரான் கான் நேற்று அறிவுறுத்தியது  குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close