பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்: ராணுவம் அதிரடி

  Newstm Desk   | Last Modified : 28 Feb, 2019 11:36 am
emergency-declared-in-karachi

இந்தியா - பாக்., இடையே பதற்றமான நிலை நிலவி வரும் நிலையில், பாகிஸ்தானின் கராச்சி உள்ளிட்ட பகுதிகளில், அவசர நிலையை பிரகடனம் செய்வதாக, அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள், 40 பேர் பலியாயினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது, நம் விமானப்படை குண்டு மழை பொழிந்தது. 

இதில், பாக்., ஆதரவு பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாக்., ஜம்மு - காஷ்மீரில், அத்துமீறி தாக்குதல் நடத்தியது. நம் வான் எல்லையில் நுழைய முயன்ற பாக்., ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்நிலையில், பாக்., விமானத்தை விரட்டி சென்ற, நம் விமானப் படை விமானம் பாக்., எல்லையில் விழுந்ததால், நம் விமானப்படையை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் அந்நாட்டு வீரர்களிடம் சிக்கினார். 

அவரை பத்திரமாக மீ்ட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. இதனால், இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. 

இந்நிலையில், பாகிஸ்தானின் கராச்சி நகரில், அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக, அந்நாட்ட ராணுவ தளபதி அறிவித்துள்ளார். கராச்சி மட்டுமின்றி, சிந்த் பகுதியிலும், கைபர் பகுதிகளிலும் இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, குடிநீர், மின் வினியோகம் தடையில்லாமல் நடக்க அந்தந்த துறை அதிகாரிகள் ஒழுங்காக பணியாற்ற வேண்டும் எனவும், ராணுவ தளபதி உத்தரவிட்டுள்ளார். 

ஏற்கனவே, அந்நாட்டின் முக்கிய விமான நிலையங்களில், விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது, அவரசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால், பதற்றம் அதிகரித்துள்ளது. இது, இந்தியாவுடனான போருக்கு பாக்., தயாராவதற்கான ஆரம்பமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close