268 கிராம் எடையுடன் பிறந்த உலகின் மிக சிறிய குழந்தை வீடு திரும்பியது!

  Newstm Desk   | Last Modified : 28 Feb, 2019 12:29 pm
world-s-smallest-baby-weighing-just-268-grams-goes-home-from-japan-hospital

ஜப்பானில், 268 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை, உலகின் மிகச் சிறிய ஆண் குழந்தை என்ற அந்தஸ்த்தை பெற்றது. டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்குப் பின், 3.2 கிலோ எடையை எட்டிய அந்த குழந்தை, பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

ஜப்பான் நாட்டின் டோக்கியோவில், கடந்த  ஆண்டு ஆகஸ்டில் இளம் பெண் ஒருவருக்கு, கர்ப்ப கால வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

அறுவை சிகிச்சை மூலம், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அளவில் மிக மிக சிறியதாக இருந்த அந்த குழந்தையின்  எடை வெறும், 268 கிராமாக இருந்தது. 

இதனால், அந்த குழந்தை உயிர் பிழைப்பது மிகவும் சிரமம் என கருதப்பட்ட நேரத்தில், அந்த குழந்தையை, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த டாக்டர்கள், அதற்கு தரமான சிகிச்சை அளித்தனர். 

டாக்டர்களின் தொடர் சிகிச்சையால், அந்த குழந்தையின் எடை, 3.2 கிலோ கிராமை எட்டியது. இதையடுத்து, அனைத்து வகை பரிசோதனைகளும் செய்த பின், குழந்தை மிக ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்த டாக்டர்கள், கடந்த வாரம், அந்த குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

தன் குழந்தை பிறந்த போது மிக மிக குறைவான எடையுடன் இருந்ததால், அது உயிர் பிழைக்கும் என தான் நம்பவேயில்லை என்று கூறிய அதன் தாய், தன் குழந்தையை மீட்டுத் தந்த டாக்டர்களுக்கு கண்ணீர் மல்க  நன்றி தெரிவித்தார். 

வெறும், 268 கிராம் எடையுடன் பிறந்த இந்த குழந்தை, உலகின் மிகச் சிறிய ஆண் குழந்தை என்ற அந்தஸ்த்தையும் பெற்றது. உலகின் பல நாடுகளிலும், இது போன்ற எடை குறைவான குழந்தைகள் பிறப்பதாகவும், அவற்றில், இதுவரை, 23 குழந்தைகள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close