அபிநந்தன் விடுதலை: ஓரிரு நாளில் முடிவு - பாக்., அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 28 Feb, 2019 02:24 pm
will-decide-within-one-or-two-days-on-abhinandan-issue-pakistan

இந்திய விமானப்படையை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தனை விடுவிப்பது குறித்து, ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என, பாக்., அரசு தெரிவித்துள்ளது. 

ஜம்மு - காஷ்மீரில், பாகிஸ்தான் விமானங்கள் ஊடுருவாமல் இருக்க, அந்நாட்டு விமானங்களை விரட்டியடிக்கும் பணியில் போது, நம் நாட்டு போர் விமானத்தின் மீது, பாக்., ராணுவம் தாக்குதல் நடத்தியது. 

இதில், அந்நாட்டு எல்லையில் நம் நாட்டு போர் விமானம் தவறி விழுந்ததில், நம் விமானப் படையை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன், பாக்., ராணுவத்திடம் சிக்கினார். 

அவரை துன்புறுத்தாமல், விரைவில் இந்தியா வசம் ஒப்படைக்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், இந்தியாவின் கருத்தையே, பல்வேறு உலக நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், பாக்., ராணுவத்தின் வசம் உள்ள அபிநந்தனை, இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து, ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படும் என, பாக்., வெளியுறவு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இது, அபிநந்தனின் விடுதலை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ள, கோடிக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் நம்பிக்கை மற்றும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close