சர்வதேச அழுத்தத்திற்கு அடி பணிந்தது பாகிஸ்தான்!

  Newstm Desk   | Last Modified : 28 Feb, 2019 05:12 pm
pak-okays-for-abhinandan-s-release-due-to-international-pressure

பாக்., ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப்படை விங் கமாண்டரை, எவ்வித நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தின.  ஜெனிவா ஒப்பந்தத்தின் படி, ஒரு நாட்டின் போர் வீரர், மற்றொரு நாட்டு வீரர்களிடம் சிக்கினால், அவரை எவ்வித காயமும் படுத்தாமல், ஏழு நாட்களுக்குள், அவரின் தாய் நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும். 

இந்நிலையில், பாக்., எல்லையில் தவறி விழுந்த அபிநந்தனை, அந்நாட்டினர் அடித்து காயப்படுத்திய வீடியோ, இணையத்தில் வேகமாக பரவியது. அதன் பின், அவர், சிகிச்சை பெற்று, டீ குடித்துக் கொண்டே பேசுவது போன்ற வீடியோவும் வெளியானது. 

இது போன்ற வீடியோக்கள் வெளியிடுவது, ஜெனிவா ஒப்பந்தத்திற்கு எதிரானது என, நம் நாட்டு அரசு கண்டனம் தெரிவித்தது. தவிர, அபிநந்தனை எவ்வித நிபந்தனையும் இன்றி, எந்த காயமும் ஏற்படுத்தாமல் பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. 

மத்திய அரசின் தொடர் நடவடிக்கை, சர்வதேச நாடுகளின் அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், அபிநந்தனை விடுவிக்க, பாக்., அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பார்லிமென்ட்டில் நடந்த கூட்டு கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதை தொடர்ந்து, இந்திய விமானப்படை அதிகாரி, அபிநந்தனை, நல்லெண்ண அடிப்படையிலும், அமைதியை விரும்பும் நோக்கத்திலும் விடுவிப்பதாக, பாக்., பிரதமர் இம்ரான் கான் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

அபிநந்தன் பத்திரமாக மீட்க்கப்பட வேண்டும் என, அவருக்காக பிரார்த்தித்த, கோடான கோடி இந்தியர்களுக்கு, இந்த செய்தி மிகப் பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close