இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளை அனுமதிக்க மாட்டோம் - ஷேக் ஹசீனா

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 10:31 am
we-wont-allow-bangladesh-for-terrrorism-against-india-sheikh-hasina

வங்கதேச மண்ணில் இருந்து எந்தவொரு தீவிரவாத இயக்கமும், இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஷேக் ஹசீனா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, இருதரப்பு, பிராந்திய மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு மூலமாக தெற்காசியப் பிராந்தியத்தில் இருந்து தீவிரவாதத்தை முற்றிலும் துடைத்தெறிய வேண்டும் என்பதில் வங்கதேச அரசு உறுதியாக இருக்கிறது என்று தெரிவித்தார். மிகுந்த அடிப்படைவாத சிந்தனை கொண்ட தீவிரவாதம் என்பது இருநாடுகளுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும், இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு தீவிரவாத செயலையும் வங்கதேசம் அனுமதிக்காது என்றும் ஹசீனா தெரிவித்தார்.

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் பலியான இந்திய துணை ராணுவப் படை வீரர்களின் குடும்பத்தினருக்கு மீண்டும் ஒருமுறை இரங்கல் தெரிவிப்பதாகவும் ஷேக் ஹசீனா குறிப்பிட்டார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close