சிரியாவில் சரணடைந்த 3000 ஐ.எஸ்.பயங்கரவாதிகள் !

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 07:43 am
is-terrorists-surrendered-to-syria-army

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுமார் 3000 பேர் சிரியா ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர். சிரியாவில் அரசுப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், ஐ.எஸ். பயங்கரவாதிகளும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். 
 
இதனையடுத்து, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரட்டப்பட்டு, அவர்களிடம் இருந்த அனைத்து நகரங்களையும் மீட்டன.  ஆனாலும், பாகுஸ் கிராமம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் தான் இருந்தது. 

பாகுஸ் கிராமத்தையும் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்க அமெரிக்க கூட்டுப்படைகளுடன் இணைந்து, சிரிய ராணுவம் அங்கு சரமாரி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனிடையே,  முழுக்கட்டுப்பாட்டையும் இழந்துவிட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு ராணுவத்திடம் சரணடைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) ஒரு நாளில் மட்டும் சுமார் 3000 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரிய ராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close