உலகம் முழுவதும் முடங்கிய பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம்

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 12:22 pm
facebook-instagram-and-whatsapp-are-still-down-for-some-users-around-the-world

முக்கிய சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை முடங்கியதால் பயனாளர்கள் புதிய பதிவை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

நேற்று இரவு முதல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகிய சமூக வலைதளங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் பலரால்புதிய பதிவுகளை பதிவிட முடியவில்லை என்று தெரிகிறது. சிலர் தங்கள் பேஸ்புக் கணக்கில் நுழையமுடியாத நிலையில் இருப்பதாகக் கூறுகின்றனர். இன்னும் சிலர் பேஸ்புக் பக்கங்கள் திறக்கப்படவில்லை என புகார் கூறியுள்ளனர். 

இதுகுறித்து ட்விட்டர் மூலம் பேஸ்புக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பை சீரமைக்க முயற்சிகள் மெற்கொள்ளப்பட்டு வருவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் இது சைபர் தாக்குதலால் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடமெரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அதிகமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இந்தப் பிரச்னை பற்றி நடவடிக்கை எடுத்துக்கொண்டிருப்பதை உறுதிசெய்துள்ளார். 

 

 

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பேஸ்புக் நிறுவனம், இந்த பிரச்னை DDoS எனப்படும் இணையதளத்தை முற்றிலும் முடக்கும் இணையவெளி தாக்குதல் அல்ல எனத் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் இந்த பிரச்னை தீர்ந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close