மறு உத்தரவு வரும்வரை அனைத்து மசூதிகளையும் மூடிவைக்கும்படி நியூஸிலாந்து உத்தரவு

  Dr.தர்மசேனன்   | Last Modified : 15 Mar, 2019 12:58 pm
new-zealand-govt-close-all-mosques-till-the-next-order

நியூஸிலாந்து நாட்டில் மறு உத்தரவு வரும்வரை நாட்டில் உள்ள அனைத்து மசூதிகளையும் முடி வைத்திருக்குமாறு என அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

நியூஸிலாந்து நாட்டில் வெள்ளிக்கிழமையான நேற்று  தொழுகை நேரத்தில் டீன்ஸ் ஈவ் மசூதி, அல் நூர் மசூதி ஆகிய இரண்டு மசூதிகளில் வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள், அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 40 பேர் வரை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்ற நிலையில் போலீசார் அவர்களை  கிரைஸ்ட் சர்ச் நகரில் தேடி வருகின்றனர். அந்த நகரின் எல்லைகள்  மூடி வைக்கப்பட்ட நிலையில் நகரெங்கிலும் போலீசார்  குற்றவாளிகளை  வலைவீசித் தேடி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் வசிப்பவர்களை வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் எனவும், துப்பாக்கி ஏந்திய குற்றவாளிகளை இன்னமும் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இஸ்லாமியர்கள் மீது மீண்டும் ஓர் தாக்குதல் நடைபெறுவதைத் தடுத்திடும் நோக்கில், மறு அறிவிப்பு வரும்வரை  நியூஸிலாந்தில் உள்ள அனைத்து மசூதிகளையும் மூடி வைத்திருக்குமாறு அந்த நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுவரை ஓர் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாகவும், இந்த குற்றச் சம்பவத்தில் மேலும் பலர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் கிரைஸ்ட் சர்ச் நகரப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close