துப்பாக்கியை பிடுங்கி பலரின் உயிரை காப்பற்றிய மசூதியின் பராமரிப்பாளர்

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 01:14 pm
newzealand-mosque-worker-saved-many-lives-by-grabbed-the-gun

நியூஸிலாந்தில் உள்ள மசூதிகளில் நேற்று மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டின்போது, பராமரிப்பாளர் ஒருவர் துப்பாக்கியை பறித்து பலரது உயிரை காப்பாற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

கிறைஸ்டுசர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஒரு மசூதியில் நடைபெற்ற தாக்குதலை, அந்த நபரே ஃபேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பினார். அவர் எந்த இடையூறுமின்றி தப்பிச்செல்வதும் அதில் பதிவாகியிருந்தது. அதேசமயம், மற்றொரு மசூதியில் நடந்த தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய சையது மசூருதீன் என்பவர், அங்கு நடந்த சம்பங்கள் குறித்து ஊடகங்களுக்கு விவரித்துள்ளார்.

அதில், “மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே வந்தார். அப்போது, பெண் ஒருவர் உதவி கேட்டு அலறினார். ஆனால், அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டார் அந்த நபர். அந்த சமயத்தில், பின் பகுதியில் இருந்து திடீரென பாய்ந்த ஒருவர் துப்பாக்கியை பறித்துக் கொண்டார். இதனால், தாக்குதல் நடத்தியவர் அங்கிருந்து தப்பியோடி காரில் ஏறிச் சென்றுவிட்டார். துப்பாக்கியை பறித்தவரை எனக்குத் தெரியும். அவர் மசூதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்பவர். கார்களை பார்க்கிங் செய்வதற்கு உதவியாக இருப்பவர். நான் இன்று உயிரோடு இருப்பதற்கு அவர்தான் காரணம். நான் அவரைப் பார்க்க வேண்டும்’’ என்றார் அவர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close