ஈராக்கில் படகு கவிழ்ந்து 40 பேர் உயிரிழப்பு !

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 07:50 am
iraq-boat-accident-40-dead

ஈராக்கில் நேற்று (வியாழக்கிழமை) புத்தாண்டு தினத்தை கொண்டாட படகில் சென்ற 40க்கும் மேற்பட்டோரில், 40 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ஈராக் நாட்டில் உள்ள குர்திஷ் இன மக்கள் தங்களது புத்தாண்டை நேற்று (வியாழக்கிழமை) கோலாகாலமாக கொண்டாடினர். இந்நிலையில் புத்தாண்டை கொண்டாட 40-க்கும் மேற்பட்டோர் ஒரே படகில் மொசூல் நகர் அருகே உள்ள டைகரிஸ் ஆற்றை கடந்து சென்றுள்ளனர். 

 
அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததால் எதிர்பாராதவிதமாக அந்த படகு திடீரென ஆற்றில் மூழ்கி கவிழ்ந்தது. படகில் இருந்த 40 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும், ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்றுவருவதாகவும் மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close