ஹிந்து சிறுமியரை கடத்தி கட்டாய மதமாற்றம், திருமணம் செய்து வைத்தவன் கைது!

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 04:26 pm
one-arrested-in-abduction-forced-marriage-of-hindu-minor-girls-in-pakistan-s-sindh

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது, பாகிஸ்தானின் சிந்த் பகுதியை சேர்ந்த ஹிந்து மதத்தை சேர்ந்த இரு சிறுமியரை கடத்தி சென்று, அவர்களை கட்டாய மதமாற்றம் செய்து, மாற்று மதத்தினருடன் திருமணம் செய்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை, அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். 

பாகிஸ்தானின் பஞ்சாப் மகாணத்தில் உள்ள கோட்கி மாவட்டத்தை சேர்ந்த, ஹிந்து சிறுமியர் இருவர், ஹோலி பண்டிக்கையின் போது மர்ம நபரால் கடத்தப்பட்டனர். அவர்களை கடத்திய நபர், அந்த சிறுமியரை கட்டாயப்படுத்தி, இஸ்லாம் மதத்திற்கு மாற்றினான். பின், அவர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து, நம் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாக்., அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

இற்கிடையே, ஹிந்து சிறுமியரை கடத்தி, கட்டாய மதம் மாற்ற திருமணம் செய்ததில் உடந்தையாக இருந்த நபரை, அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். அந்நாட்டில் உள்ள உமர்கோட், கோட்டி உள்ளிட்ட மாவட்டங்களில், ஹிந்துப் பெண்கள், சிறுமிகள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்து அவர்களை, மாற்று மதத்தினருடன் திருமணம் செய்து வைக்கும் கும்பல், பல ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

கடந்த  ஆண்டு அந்நாட்டு பார்லிமென்ட் தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் வேட்பாளராக களம் இறங்கியவரும், தற்போதைய பிரதமருமான இம்ரான் கான், சிறுபான்மை மதத்தை சேர்ந்த பெண்கள் கடத்தப்பட்டு, மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார். 

இந்நிலையில், இம்ரான் கான் பிரதமர் ஆன பிறகும் கூட, தங்கள் பகுதியில், ஹிந்துப் பெண்கள், சிறுமிகள் கடத்தப்படுவது குறைந்தபாடில்லை என, அந்நாட்டு மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close