ஓரினச்சேர்கைக்கு கல்வீச்சு; திருட்டுக்கு கை,கால் துண்டிப்பு - புருனேயில் வருகிறது சட்டம்

  Newstm Desk   | Last Modified : 29 Mar, 2019 12:25 pm
brunei-to-punish-gay-sex-to-death-by-stoning

ஓரினச்சேர்க்கையாளர்களை கல்லால் அடித்துக் கொலை செய்வது, திருட்டுக்கு மாறு கை, மாறு கால் வாங்குவது போன்ற கடும் தண்டனைகளை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தங்களை புருனே அரசு அமல்படுத்தவுள்ளது. இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எனினும், புருனேவின் சுல்தான் ஹஸனல் போல்கியா, இதை அமல்படுத்துவது குறித்து ஏப்ரல் 3ம் தேதி இறுதி முடிவு எடுக்கவுள்ளார். கடந்த 2013ம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்ட இந்த சட்டத்திருத்தங்களை அமல்படுத்துவதில், பல்வேறு சிக்கல்கள் காரணமாக காலதாமதம் நிலவி வந்தது. இந்நிலையில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

ஓரினச்சேர்க்கை புருனேவில் ஏற்கனவே சட்டவிரோதச் செயல்தான். ஆனால், அதற்கு கல்லால் அடித்துக் கொலை செய்யும் தண்டனை புதிதாக அறிமுகம் ஆக உள்ளது. திருமணத்தை தாண்டிய வேறு பந்தங்களில் ஈடுபடுபவர்களுக்கும் இந்த தண்டனை உண்டு. அதேபோன்று திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு முதலில் வலது கையை துண்டிக்கவும், இரண்டாம் முறை திருட்டில் ஈடுபட்டால் இடது கால் பாதத்தை துண்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஓரினச்சேர்க்கைக்கு கல்லால் அடித்துக் கொலை செய்யும் தண்டனை, ஷரியா சட்ட விதிகளின்படி அறிமுகம் ஆகிறது. புருனேவில் வாழும் முஸ்லிம்களுக்கு மட்டுமே இந்த சட்ட விதி பொருந்தும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close