ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு; 3 பேர் உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 09:03 am
afghanistan-bomb-blast-3-dead

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நடத்தி இரண்டு குண்டு வெடிப்பு தாக்குதலில் 3 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர். 

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரில் நேற்று (சனிக்கிழமை) அடுத்தடுத்து இரண்டு முறை பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் சிக்கி 3 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்தது அங்கு வந்தடைந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த குண்டுவெடிப்புகளுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close