ஜப்பானின் ‘எப்-35’ போர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது !

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 07:58 am
japanese-f-35-wreckage-found-in-pacific

ஜப்பானில் பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்ற ‘எப்-35’ போர் விமானம் பசிபிக் கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. விமானத்தில் இருந்த விமானி குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. 

ஜப்பானின் மிசாவா நகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து கடந்த செவ்வாய்கிழமை மாலை ‘எப்-35’ ரக போர் விமானம் வழக்கமான பயிற்சிக்காக ஒரே ஒரு விமானியுடன் புறப்பட்டு சென்றுள்ளது.  புறப்பட்டு சென்ற 30 நிமிடத்திற்கு பிறகு கட்டுப்பாட்டு அறையுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டதால், காணாமல் போன விமானத்தை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன். இந்நிலையில், இந்த விமானம் பசிபிக் கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியது தெரியவந்துள்ளது. விமானி குறித்து எந்த ஒரு தடயமும் கிடைக்காததால், அவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close