சூடானில் ராணுவ புரட்சி: அதிபர் கைது 

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 06:53 pm
sudan-s-military-removes-president-omar-al-bashir

சூடான் நாட்டு அதிபர், அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டுமள்ளார். இதையடுத்து, ராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

சூடான் நாட்டு பிரதமராக இருந்தவர், ஒமர் அல் பஷீர், அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். 

இதை தொடர்ந்து, அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ராணுவ அமைச்சர், அகமது அவத் இபின் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். 

இதையடுத்து, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அந்நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, அந்நாட்டு எல்லைகள் முடப்பட்டுள்ளன. 

அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை, தரை வழியிலான எல்லைகள் முடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்கு வான்வெளி எல்லை முடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. 

newstm.in

 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close