தென் ஆப்ரிக்கா: கனமழை, நிலச்சரிவுக்கு  60 பேர் உயிரிழப்பு !

  டேவிட்   | Last Modified : 25 Apr, 2019 07:44 am
more-than-60-dead-in-south-africa-after-heavy-rains

தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரிலும், குவாசூலுா நட்டால் மாகாண பகுதியிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக  இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

கடும் மழை காரணமாக தென் ஆப்ரிக்காவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சாலைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. மேலும், நிலச்சரிவுகளால் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக  இதுவரை 60க்கும் பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில், மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கடற்கரை பகுதிகளில் வெள்ளப்பெருக்கும், பலத்த காற்று வீசும். கடும் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசா விமானம் மூலம் பார்வையிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close