அடுக்குமாடி கட்டட‘லிப்ட்’ அறுந்து விழுந்த கோர சம்பவம்;  11 பேர் உயரிழப்பு !

  டேவிட்   | Last Modified : 26 Apr, 2019 07:11 am
lift-cable-broke-at-construction-site-in-china

சீனாவின் ஹெங்சூய் நகரில் அடுக்குமாடி கட்டடத்தின் லிப்டின் கேபிள் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சீனா நாட்டின்ஹேபேய் மாகாணத்தில் உள்ள ஹெங்சூய் நகரில் அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களில் சிலர் கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்து லிப்டில் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தபோது, திடீரென லிப்டின் கேபிள் அறுந்து, லிப்ட் வேகமாக தரையில் வந்து விழுந்தது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரழந்தனர். பலத்த காயம் அடைந்த இருவர் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close