தேவாலயத்தை சீரமைக்க 3 டாலர்கள் கொடுத்த சிறுமி !

  டேவிட்   | Last Modified : 29 Apr, 2019 11:28 am
9-years-child-donated-for-church

தீ விபத்தில் சேதமான பாரீஸ் நோட்ரோ-டேம் தேவாலயத்தை சீரமைக்க இங்கிலாந்தை சேர்ந்த கெயித்லின் என்ற 9 வயது சிறுமி தன்னுடைய சிறுசேமிப்பில் இருந்து 3 அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்கியுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது. 

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் 850 ஆண்டுகள் பழமையான நோட்ரே-டேம் தேவாலயம், கடந்த 15-ந் தேதி தீ விபத்தில் தேவாலயத்தின் பெரும்பகுதி நாசமடைந்தது. 

பிரான்ஸ் நாட்டின் பிரசித்தி பெற்ற இந்த தேவாலயம், முன்பு இருந்ததைக் காட்டிலும் அதிக பொலிவுடன் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என அதிபர் மெக்ரான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காக சர்வதேச அளவில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த கெயித்லின் என்ற 9 வயது சிறுமி தன்னுடைய சிறுசேமிப்பில் இருந்து ரூ.200-ஐ (மூன்று அமெரிக்க டாலர்) தேவாலயத்தை சீரமைப்பு பணிக்காக நன்கொடையாக வழங்கி உள்ளார். இதனுடன் ஒரு கடிதமும் எழுதியுள்ளார் அந்தச் சிறுமி. அதில், தேவாலயத்தின் தீ விபத்தை அறிந்து வேதனை அடைந்ததாகவும், நான் கொடுத்தது பெரிய தொகையாக இல்லாவிட்டாலும், என்னால் இயன்ற சிறிய உதவியை செய்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close