பெண் ஓட்டி வந்த கார் பள்ளியில் புகுந்தது... 2 குழந்தைகள் உயிரிழப்பு..!

  டேவிட்   | Last Modified : 09 May, 2019 07:46 am
japan-car-entered-into-school-zone-2-killed

ஜப்பானில் உள்ள மழலையர் பள்ளி ஒன்றில் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். காரை ஓட்டி வந்த இரு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஜப்பான் நாட்டின் ஷிகாவில் உள்ள மழலையர் பள்ளியில் நேற்று (புதன்கிழமை) காலை அப்பள்ளியின் ஆசிரியர்கள் 3 பேர், மாணவர்களை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு அருகே உள்ள சாலையோர நடைபாதையில் சென்றுகொண்டிருந்தபோது,  சாலையில் வந்து கொண்டிருந்த கார் தறிக்கெட்டு ஓடி சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த மழலையர் பள்ளி மாணவர்கள் கூட்டத்துக்குள் நுழைந்தது.  

இதில், அங்கிருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை மீட்டு மருத்துவ மனையில் சிகிச்சை்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி 2 குழந்தைகள் உயிரிழந்தனர். தற்போது 3 குழந்தைகள் உயிருக்கு போராடி வருகின்றன. இந்த விபத்து நேரிட்டதுக்கு காரணமான கார்களை ஓட்டி வந்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close