பாகிஸ்தானில் நட்சத்திர ஹோட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்

  முத்து   | Last Modified : 11 May, 2019 08:21 pm
in-pakistan-the-star-entered-the-hotel-and-attacked-the-terrorists

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் நட்சத்திர ஹோட்டலுக்குள் பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.  குவாதர் நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் 3 பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும், விடுதியில் வெளி நாட்டினர் யாரும் இல்லை எனவும் பாகிஸ்தான் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

குவாதர் நகரில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகம் அருகே பயங்கரவாதிகள் இந்த துப்பாக்கிச் சூட்டு நடத்தி வருகின்றனர். இந்திய பெருங்கடலையும் ஜின்ஜியாங் மாகாணத்தை இணைப்பதற்கான துறைமுகத்தை சீனா கட்டி வருகிறது. குவாதர் நகரில் ஒருவாரத்திற்கு முன் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close