உலகின் மிக நீளமான பிரமிக்க வைக்கும் நதி...!

  இளங்கோ   | Last Modified : 19 May, 2019 04:10 pm
the-longest-river-in-the-world

மத்திய ஆப்பிரிக்காவில் பாயும் சர்வதேச நதியான நைல் நதிதான், உலகின் மீக நீளமான நதியாகும். எகிப்து, சூடான், ருவாண்டா  உள்ளிட்ட 11 நாடுகளை இணைத்தபடி ஓடும் இந்த ஆற்றின் மொத்த நீளம், ஆறாயிரத்து 695 கிலோ மீட்டர் ஆகும். வடகிழக்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் பாயும் மிக முக்கியமான ஆறாகவும் கருதப்படுகிறது. இவை பெரும்பாலும் சகாரா பாலைவனத்தின் வழியாகவே பாய்கிறது.

புருண்டி நாட்டில் தோன்றும் இந்த நதி, இறுதியாக மத்திய தரைக் கடலில் கலக்கிறது. அண்மைக்கால ஆய்வுகளின்படி, தென் அமெரிக்காவில் பாயும் அமேஸான் நதிதான் உலகின் மிக நீளமான நதி என்று சிலர் கூறினாலும், நைல் நதியே மிக நீளமான நதி என பல்வேறு அமைப்புகளால் அதிகாரப்பூர்வமாக அங்கிகீரிக்கப்பட்டு, கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. 

கிரேக்கப் புராணங்களில் நைல் நதியின் வரலாறு: 

கிரேக்கக் கடவுள்களிலேயே ஜீயஸ் மிகவும் சக்தி வாய்ந்தவர். அவருடைய அழகிய மனைவியின் பெயர் ஹீரா. ஒரு முறை பூமியில் ஜீயெஸ் நடந்து கொண்டிருந்தபோது ஓர் அழகிய பெண்ணைக் கண்டார். அந்தப் பெண்ணின் பெயர் லோ. அவள் அழகில் அவர் மயங்கினார். தன் மனைவியின் கண்களுக்குத் தன் செயல்பாடுகள் தெரியாமல் இருக்க பூமிப்பந்து முழுவதையும் கரு மேகங்களால் சூழச் செய்தார்.

அவர் லோ வைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு பூமியை ஆனந்தமாகச் சுற்றி வந்துள்ளார். ஆனால் அவருடைய மனைவி ஹீராவிற்கு எல்லா விஷயங்களும் தெரிந்தவுடன், ஜீயெஸ் உடனே லோவை ஒரு பசுமாடாக மாற்றினார். ஹீரா வந்து பார்த்தபோது ஜீயெஸின் அருகே ஒரு பசுமாடு இருந்ததை கண்டார். பின்னர் இந்தப் பசு யாருடையது என்று கேட்க, அதற்கு ஜீயெஸ் எனக்கு தெரியாது என்றார்.

உடனே பசுவை தனக்குப் பரிசாக அளிக்குமாறு வேண்டினாள். வேறு வழியில்லாததால் ஜீயெஸ் அதனை அவளுக்குப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட ஹீரா பாதாள உலகில் அதை மறைத்து வைத்து அதற்கு காவலர் ஒருவரை நியமித்தாள். பாதாள உலகில் சிறைப்பட்டிருக்கும் "லோ' வைக் காப்பாற்ற எண்ணிய ஜீயெஸ், தன் மகன் அப்பல்லோவை ஒரு பாடல் பாட சொல்ல, பாடலை கேட்ட காவலர் தூங்கிவிட்டார்.

அந்த நேரத்தில் பசு வடிவிலிருந்த லோ தப்பி ஓடினாள். இதை அறிந்து ஆத்திரமடைந்த ஹீரா, கடு விஷம் கொண்ட பூச்சி ஒன்றை உருவாக்கி அந்தப் பசுமாட்டைக் கடிக்குமாறு கட்டளையிட்டார். இதை அறிந்த லோ கடலுக்குள் பசு வடிவேலேயே குதித்து நீந்தி பல்வேறு துன்பங்களைத் தாண்டி எகிப்தை அடைந்தாள்.

பிறகு மனம் உறுகிய ஹீரா, லோ அடைந்த துன்பத்தைக் கண்டு மனித உருவில் மாற்றினாள். ஆனால் தன் கணவனை இனி சந்திக்கக் கூடாது என்று லோவிடம் உறுதி பெற்றுக் கொண்டாள். ஆனால் பொய்யே பேசாத கடவுள் பொய் பேசியதால் அவரால் உருவாக்கப்பட்ட கருமேகங்கள் மழையாகப் பொழியத் தொடங்கின.

தொடர்ந்து பல வருடங்களுக்குக் கொட்டித் தீர்த்த மழையால், பெரும் பள்ளத்தில் தண்ணீர் நிரம்பி அந்த இடமே ஒரு  ஏரியாக மாறியது. எகிப்தின் பாலைவனத்தில் மனித உருவில் தவித்துக் கொண்டிருக்கும் லோ வின் தாகத்தைத் தணிக்க அந்த நீர் ஒரு ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. அதுவே நைல் நதி என்று கிரேக்க புராணங்கள் கூறுகின்றன.

நைல் என்ற சொல்லுக்கு எகிப்திய மொழியில் ஆறு என்று பெயர். நைல் நதியானது, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரிட்டீரியா, தெற்கு சூடான், மத்தய சூடான், மற்றும் எகிப்து ஆகிய பதினோரு நாடுகள் வழியாகப் பாய்கிறது. அதனால் இதனை சர்வதேச ஆறு என்றும் கூறப்படுகிறது.

நைல் நதி வெள்ளை நைல் மற்றும் நீல நைல் என இரு கிளைகளைக் கொண்டுள்ளது.  எகிப்து, சூடான் ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது நைல் நதி. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பண்டைய எகிப்தின் முக்கிய இடங்கள் நைல் நதியின் கரையை ஒட்டியே அமைந்திருந்தன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close