ஐ.எஸ். பயங்கரவாத முகாமை அழித்தது ஈராக் ராணுவம் !

  டேவிட்   | Last Modified : 20 May, 2019 08:11 am
iraq-army-attacked-is

ஈராக்கில் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத முகாமை அழிக்கப்பட்டு, அங்கிருந்த ஏராளமான வெடிபொருட்களை கைப்பற்றியுள்ளது. 

ஈராக் நாட்டின் அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், வெடிபொருட்கள் பதுக்கி வைக்க முகாம் ஒன்று செயல்பட்டு வந்ததாகவும், ராணுவத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஈராக் ராணுவம் அங்கு அதிரடி தாக்குதல் நடத்தியது. அதில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த முகாம் அழிக்கப்பட்டதோடு, அங்கிருந்து வெடிபொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close