காபூல் மசூதியில் தாக்குதல்; காயமடைந்தோரின் நிலை கவலைக்கிடம்!

  டேவிட்   | Last Modified : 25 May, 2019 08:52 am
kabul-mosque-attack-1-dead-16-injured

காபூலில் உள்ள ஒரு மசூதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தலைமை இமாம் உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த 16 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் புறநகர் பகுதியான பகிட்டா கோட் பகுதியில் உள்ள தக்வா மசூதியில் நேற்று (24ஆம் தேதி) சிறப்பு தொழுகை நடைபெற்றபோது, அங்கு பலத்த சத்தத்துடன் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், தலைமை இமாம் மவுலவி சமியுல்லா ரைஹான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 16 பேர் பலத்த காயமடைந்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close