ஒற்றுமை நிலவ வேண்டும்: மோடியிடம் இம்ரான்கான் வலியுறுத்தல் 

  Newstm Desk   | Last Modified : 26 May, 2019 05:30 pm
unity-should-be-imran-khan-urges-modi

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடியிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று உரையாடினார். அப்போது, 2-ஆவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்றும் மோடியிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 


newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close