பிரதமர் நரேந்திர மாேடியை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க பத்திரிகை

  Newstm Desk   | Last Modified : 29 May, 2019 03:10 pm
from-divider-in-chief-to-a-unifier-for-us-time-magazine-modi-has-united-india-like-no-pm-in-decades

சரியாக ஒரு மாதத்திற்கு முன், பிரதமர் நரேந்திர மாேடியை, ‛மக்களை பிரித்தாளும் தலைவன்’ என விமர்சித்து கட்டுரை வெளியிட்ட, அமெரிக்க பத்திரிகையான டைம் மேகசின், தற்போது தேர்தல் முடிவுகளுக்குப் பின், அவரை கடுமையாக புகழ்ந்து தலையங்கம் வெளியிட்டுள்ளது. 

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல டைம் மேகசினில், கடந்த மாதம் வெளியான கட்டுரையில், இந்திய பிரதமர் நரேந்திர மாேடி, மக்களை பிரித்தாள்வதில் வல்லவர். அவர்கள் பிரித்தாளும் தலைவர் என குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், மக்களவை தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சி மிக பிரமாண்ட வெற்றி பெற்றதை அடுத்து, அந்த பத்திரிகை, நரேந்திர மாேடி பற்றிய தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. 

அந்த பத்திரிகை நேற்று வெளியிட்டுள்ள கட்டுரையில், ‛நரேந்திர மாேடி நாட்டு மக்களை இணைத்தது போல், இதற்கு முன் எந்த ஒரு இந்திய பிரதமரும் செயல்பட்டதில்லை’ என அதில் குறிப்பிட்டுள்ளது. கடந்த மாதம் வெளியிட்ட கட்டுரையில் நரேந்திர மாேடியை கடுமையாக விமர்சித்த டைம் நிறுவனம், தேர்தல் வெற்றிக்குப் பின், அவரை மக்கள் நாயகன் என்ற அந்தஸ்த்துடன் கட்டுரை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close