ஊடகங்களில் வதந்தி பரப்புவோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை!

  Newstm Desk   | Last Modified : 06 Jun, 2019 04:21 pm
srilankan-government-will-soon-amend-act-for-jailing-the-fake-news-makers

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் போலி தகவல்கள், வதந்திகளை பரப்புவோருக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், 10 லட்சம் ரூபாய் இலங்கை பணத்தை அபராதமாக வசூலிக்கவும், இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று, இலங்கையில் உள்ள தேவாலயம் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில், நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பலர் பலியாகினர். இந்நிலையில், இதே போன்ற பல தாக்குதல்கள் நடத்தப்பட இருப்பதாக, அந்நாட்டில், பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. 

குறிப்பாக, பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், போலி செய்திகள், வதந்திகள் அதிகம் பரப்பப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் பீதியடைவதோடு, அரசின் கவனமும் சிதறடிக்கப்படுகிறது. இதுபோன்ற தகவல்கள் உண்மையா, வதந்தியா என கண்டறியவே, அதிகாரிகள் தங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டியுள்ளது. 

இதையடுத்து, சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பொய் செய்தி, வதந்திகளை பரப்புவோருக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும், இலங்கை பணத்தில், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த சட்ட வரைவு இறுதி செய்யப்பட்டு, விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

ஏற்கனவே, இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை, 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க, சிங்கப்பூர் அரசு சட்டம் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close