ஒட்டுமாெத்த நாகரிகத்தையும் அழிக்கவல்லது பயங்கரவாதம்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2019 08:51 pm
pm-modi-speech-at-maldives-parliament

குறிப்பிட்ட நாடுகள் ஆதரிக்கும் பயங்கரவாதம், அந்த நாட்டிற்கோ, அந்த பகுதியில் உள்ள பிற நாடுகளுக்கோ மட்டுமின்றி, ஒட்டு மாெத்த மனித இனத்திற்கும், நாகரித்திற்கும் எதிரானது. அவற்றை அழிக்கவல்லது என, பிரதமர் நரேந்திர மாேடி பேசினார். 

அரசுமுறைப் பயணமாக மாலத்தீவுகளுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மாேடி,  அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என வலியுறுத்தினார். 

மேலும் "உள்நாட்டு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும். சில நாடுகள் பயங்கரவாதிகளை ஆதரிப்பதன் மூலம், அந்த நாட்டிற்கும், அந்த பகுதியில் அமைந்துள்ள நாடுகளுக்கும் மட்டுமின்றி, ஒட்டுமாெத்த மனித நாகரிகத்திற்கும் ஆபத்தை விளைவுக்கும் என்பதை உணர வேண்டும். பயங்கரவாதத்தை எந்த உருவிலும் அனுமதிக்க முடியாது. அதை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’’ என நரேந்திர மோடி பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close