நேபாளம்:  பஸ் மீது லாரி மோதல்; 2 இந்தியர்கள் உயரிழப்பு

  டேவிட்   | Last Modified : 12 Jun, 2019 07:50 am
nepal-bus-accident-2-dead-21-injured

 நேபாளத்தில் பஸ் மீது லாரி மோதி நிகழ்ந்த விபத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

நேபாளத்துக்கு இந்தியாவில் இருந்து சுமார் 60 பேர் சுற்றுலா சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் காத்மாண்டுவில் இருந்து ஒரு பஸ்சில்  ரவுத்தாட் மாவட்டம் பவுராய் வனப்பகுதியில் சென்ற போது ஓய்வுக்காக சிறிது நேரம் பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த லாரி, நின்றுகொண்டிருந்த பஸ் மீது மோதியது.  இதில் பஸ்சில் இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிஜய்குமார் ஜெனா, சரண் பி‌ஷால் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 21 பேரில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக நேபாளம் போலீசார் தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close