குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை  நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 17 Jul, 2019 07:12 pm
first-victory-for-india-in-kulbushan-jadhav-case

நம் நாட்டை சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ்,  உளவாளியாக செயல்பட்டதாகக் கூறி, பாக்., ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

இந்நிலையில், அவர், உளவாளியாக செயல்படவில்லை என்றும், வேறு நாட்டிலிருந்து அவரை, பாக்., ராணுவம் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று, அவரை கைது செய்துள்ளதாகவும், மத்திய அரசின் சார்பில் வாதாடப்பட்டது. அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராகவும், அவரை விடுதலை செய்யக் கோரியும், இந்தியா சார்பில், சர்வதேச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், 2017ம் ஆண்டு, குல்பூஷண் ஜாதவுக்கு, பாக்., நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. மேலும், பாக்., அரசு அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து மீண்டும் முதலில் இருந்து முறையாக விசாரிக்க வேண்டும் எனவும், தமது சார்பில் வாதாட வழக்கறிஞரை நியமித்து கொள்ள குல்பூஷண் ஜாதவுக்கு முழு உரிமை உள்ளதென்றும் சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். 

மேலும், பாகிஸ்தான் தரப்பு வாதங்களை நிராகரித்த நீதிபதிகள், குஷ்பூஷண் ஜாதவ் கைது மற்றும் அதன் தொடர் நடவடிக்கைகளில், சர்வதேச விதிமுறைகளை  பாகிஸ்தான் மீறியுள்ளது விசாரணையில் உறுதியாகிறது எனவும் தெரிவித்தனர்.

இதன் மூலம், இந்த வழக்கில், இந்தியாவுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய துாதரக அதிகாரிகள், குல்பூஷணை சந்திக்க முழு உரிமை உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close