ஆப்கானிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது பல இடங்களில் இன்று மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபூலில் நேற்று முன்தினம், திருமண நிகழ்ச்சி ஒன்றில், தற்கொலை படை தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில் பெண்கள் உள்ளிட்டோர் 63 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 182 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த நிலையில், இன்று ஆப்கானிஸ்தானின் ஜலலாபாத் நகரில் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது, பல்வேறு இடங்களில் மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், 66 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in