வைர வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டனில் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

  Newstm Desk   | Last Modified : 24 Aug, 2019 06:21 pm
judicial-custody-extented-for-nirav-modi

நம் நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் பல ஆயிரம் ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பி சென்ற நீரவ் மோடி, பிரிட்டனில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில் வழக்கமான விசாரணைகளுக்காக அவர், நேற்று அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கு விசாரணைக்குப் பின், அவரது நீதிமன்ற காவல் செப்டம்பர் 19 வரை நீட்டிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். அவரை இந்தியாவிற்கு நாடு கடத்தி விசாரணைக்கு அழைத்து வருவது குறித்து, மே 2020ல் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close