இந்தியர்களின் தன்னம்பிக்கை உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்!

  Newstm Desk   | Last Modified : 24 Aug, 2019 10:58 pm
modi-speech-at-bahrain

அரசுமுறை பயணமாக பஹ்ரைன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றியதாவது: ''அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள். இந்தியா  முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேறி வருகிறது. உலக நாடுகள் மத்தியில் நம் நாடு பீடுநடை போட்டு வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியர்களின் தன்னம்பிக்கை மிக அதிகரித்துள்ளது. இதை இந்தியாவில் வசிக்கும் உங்கள் உறவினர்களிடம் கேட்டுப்பாருங்கள். 

அடுத்த மாதம் சந்திரயான், நிலவில் கால் பாதிக்கும் போது உலக நாடுகள் நம்மை இன்னும் கூடுதல் கவனத்துடன் உற்று நோக்கும். இது ஒரு மிகப்பெரிய சாதனை. நம் வாழ்வில் அவ்வப்போது தாங்க முடியாத இழப்புகளும், துயரங்களும் நம்மை தாக்கும். எனினும் இவை அனைத்தும் இயற்கையின் ஓர் அம்சம் என எண்ணி அதை கடந்து போக பழகிக்கொள்ள வேண்டும். 

சில தினங்களுக்கு முன் அன்பு சகோதரி சுஷ்மா காலமானார். இன்றோ என் ஆருயிர் நண்பர் அருண் ஜெட்லி  நம்முடன் இல்லை. அவர்களின் பணி அளப்பரியது. அவர்களுக்கு என் வணக்கங்கள். இந்தியாவில் தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் பெருகியுள்ளன. அதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது'' என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close