விண்வெளி மையத்திற்கு சென்றது மனித ரோபோ..

  Newstm Desk   | Last Modified : 27 Aug, 2019 09:50 am
humanoid-robot-went-to-the-space-station

ரஷ்யாவின் மனித ரோபோ விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு மையத்திற்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக நாசா அறிவித்துள்ளது. 

விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு மையத்தில் உள்ள வீரர்களுக்கு அவசர காலங்களில் உதவுவதற்காக ரஷ்யா மனித வடிவிலான ஒரு ரோபோவை உருவாக்கியது. ஃபெடார் என்ற இந்த மனித ரோபோ 1.8 மீ உயரமும், 160 கிலோ எடையும் கொண்டது. இது மின் இணைப்புகளை சரிசெய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். 

இந்த ரோபோ நாசா உதவியுடன் விண்வெளி ஆய்வு ஆய்வு மையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இந்த ரோபோவுடன் ரஷ்யாவின் சோயுஸ் எம்.எஸ்.14 என்ற ஆளில்லா விண்கலமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எப்போதும் மனிதர்களுடன் பயணிக்கும் சோயுஸ் புதிய அவசர அமைப்பை பரிசோதிப்பதற்காக இம்முறை தனியாக அனுப்பப்பட்டுள்ளது. 

2011ல் அமெரிக்காவின் நாசா அனுப்பிய ரோபோனாட்.2 என்ற மனித ரோபோ தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டது. 2013 ஆம் ஆண்டு ஜப்பான் அனுப்பிய கிரோபோ என்ற சிறிய ரோபோ மட்டுமே விண்வெளி ஆய்வுமையத்தில் உள்ள நிலையில், தற்போது ரஷ்யா புதிய மனித ரோபோ ஒன்றை அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close