இந்தியா - பாகிஸ்தான் போர்: பாக்., அமைச்சர் பகீர்

  Newstm Desk   | Last Modified : 28 Aug, 2019 04:33 pm
in-october-the-war-between-india-and-pakistan-will-be-held-pak-minister

வரும் அக்டோபர் மாதத்தில் இந்தியா - பாகிஸ்தானிடையே முழு வீச்சில் போர் நடைபெறும் என எதிர்பார்ப்பதாக, பாகிஸ்தான் நாட்டு ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமத் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் தொரடர்பாக தொடர்ந்து பிரச்னை செய்து வரும் பாகிஸ்தான், இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவை பெறுவதில் தோல்வி அடைந்தது. இதையடுத்து, அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் மிரட்டல் விடுத்தார். 

இந்நிலையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்நாட்டு ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமத், வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் இந்தியா - பாக்கிஸ்தான் இடையே போர் நடைபெறும் எனவும், அது முழு வீச்சில் இருக்கலாம் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

அவரின் இந்த பேச்சு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close