ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி!

  அனிதா   | Last Modified : 04 Sep, 2019 10:39 am
pm-modi-with-russian-chancellor

அரசு முறை பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் ஸ்வெஸ்டா கப்பல் கட்டும் வளாகத்தினை பார்வையிட்டார். 

மூன்று நாள் அரசு முறைப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா புறப்பட்டார். ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு காவல்துறையினர் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து விளாடிவோஸ்டாக் நகரில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

பின்னர்,  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் நரேந்திர மோடி ஸ்வெஸ்டாவில் உள்ள மிகப்பெரிய கப்பல் கட்டும் வளாகத்தினை பார்வையிட்டார். இந்த அரசு முறை பயணத்தில், சுமார் 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அமேலும், இரு நாடுகளின் அரசியல் ரீதியான உறவு, பாதுகாப்பு, வர்த்தகம், அணுசக்தி குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close