பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமான சேவை ரத்து!

  அனிதா   | Last Modified : 09 Sep, 2019 12:12 pm
british-airways-says-it-has-cancelled-nearly-all-flights-due-to-pilot-strike

பிரிட்டிஸ் ஏர்வேஸின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

உலகின் முன்னணி விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் விமானிகளுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதாகவும், ஆண்டு விடுப்பு நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், விமானிகள் சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிறுவனத்திடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிகிறது. 

இதனிடையே, கோரிக்கைகளை வலியுறுத்தி செப் 9,10,27 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விமானிகள் சங்கம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று அனைத்து விமானிகளும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பிரிட்டிஸ் ஏர்வேஸின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close