காஷ்மீர் பிரச்னை: ஐநாவில் பாக்., முறையீடு, இந்தியா பதிலடிக்கு தயார்

  Newstm Desk   | Last Modified : 10 Sep, 2019 03:23 pm
kashmir-issue-pak-at-un-appeal-india-ready-for-retaliation

ஐநாவின் மனித உரிமைக்குழுவில் காஷ்மீர் பிரச்னை குறித்து பாகிஸ்தான் முறையிட உள்ளது. இதைத்தொடர்ந்து, இதற்கு இந்தியாவின் விஜய் தாக்கூர் சிங்க பதிலடி தர உள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்குப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ஐ மத்திய அரசு திரும்ப்பெற்றது. அதற்கு இந்தியாவிலிருந்து காங்கிரஸ் கட்சியும், ராகுலும், தேசிய மாநாடு கட்சியின் அப்துல்லாக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாகிஸ்தான் அரசும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் ஐநாவின் மனித உரிமைக்குழுவில் காஷ்மீர் பிரச்னை குறித்து பாகிஸ்தான் முறையிட உள்ளது. அதில் வழங்கியுள்ள 150 பக்க கோப்பில் காங்கிரஸ் தலைவரான ராகுலும் தேசிய மாநாட்டுக்கட்சியின் உமர் அப்துல்லா பேசியுள்ளதையும் குறிப்பிட்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் முறையிட உள்ளது. விமர்சனம்மற்றும் குற்றச்சாட்டு குறித்து பதில் அளிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள உரிமையின் அடிப்படையில் இன்று மாலை 7 மணிக்கு இந்தியாவின் விஜய் தாக்கூர் சிங்க பதிலடி தர உள்ளார். 
 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close