“ஹொடி மோடி” நிகழ்ச்சிக்கு அசத்தலான ஏற்பாடுகள்: நரேந்திர மோடியை வரவேற்க பிரமாண்ட பேனர்கள்

  அபிநயா   | Last Modified : 19 Sep, 2019 11:15 am
houstan-is-all-set-to-welcome-indian-prime-minister-narendra-modi

"ஹௌடி மோடி"  நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள போகும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க ஹூஸ்டன் நகரம் கோலாகலமான முறையில் தயாராகிக் கொண்டிருக்கிறது. 

அமெரிக்காவின் எரிபொருள் வர்த்தகத்தின் தலை நகரமென கருதப்படும் ஹூஸ்டன் நகரில் உள்ள, என்.ஆர்.ஜி அரங்கத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நடக்கவிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் 50,000 இந்திய வம்சாவழியினர் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர். செப் 22., அன்று நடக்கவிருக்கும் அந்நிகழ்ச்சியை, ஹூஸ்டனில் செயல்பட்டுவரும்  டெக்சாஸ் இந்திய வம்சாவழியினருக்கான அமைப்பு  தொகுத்து வழங்கவுள்ளது.

இதற்கிடையில், நமது பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க ஹூஸ்டன் நகரம் பெரிய பெரிய பேனர்களுடன் தயாராகிக் கொண்டிருக்கிறது. சுமார் 50,000 இந்திய வம்சாவழியினர் கலந்துக் கொள்ளவிருக்கும் இந்நிகழ்வில் மோடியுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - ம் மேடையில் தோன்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றவிருக்கும் பிரதமர், இந்திய மக்களின் கருத்துக்களையும் அங்கே பதிவு செய்யும் நோக்கத்துடன், தனது ட்விட்டர் பதிவில், இந்திய  வம்சாவழியினரின் கருத்துக்கள் வரவேற்கப்படுவதாகவும், யோசனைகளை "நமோ" ஆப்பில் பதிவு செய்யும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும்  அக்கருத்துக்களில் சிலவற்றை அந்நிகழ்வில் பதிவு செய்ய தான் தயாராக உள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வுடன் தொடங்கவிருக்கும் பிரதமரின் அமெரிக்க பயணம், செப் 27., அன்று நடக்கவுள்ள ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில் கலந்துக் கொள்வதுடன் முடிவடைய உள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close