இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற இரண்டாவது தேர்தலில் பென்னி கண்ட்ஸ் முன்னிலை

  அபிநயா   | Last Modified : 19 Sep, 2019 02:41 pm
israel-elections-benny-gantz-leads-netanyahu

இஸ்ரேலின் தேர்தல் வரலாற்றில், முதன் முறையாக, ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக கடந்த செப் 17ஆம் தேதி தேர்தல்  நடைபெற்றது. இதில் போட்டியிட்ட  பெஞ்சமின் நெதேன்யாஹூ மற்றும் பென்னி கண்ட்ஸ்(60) இருவரில், பென்னி கண்ட்ஸ் முன்னிலை வகித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து பிரதமராக இருந்து வரும் நெதேன்யாஹூ தற்போது பின் தங்கியிருப்பதற்கு காரணம் அவர் மீதுள்ள லஞ்சம், மோசடி போன்ற வழக்குகளே எனக் கூறப்படுகிறது. பென்னி கண்ட்ஸ் அவருடைய அரசியல் வாழ்வில் இதுவரை எந்த குற்றச்சாட்டுகளும் இன்றி  நேர்மையான தலைவராக திகழ்ந்து வருவதே அவர் முன்னிலை வகிக்கக் காரணம் எனக் கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

பென்னி கண்ட்ஸுடன், நெதேன்யாஹூவின் லிகுட் கட்சியின் முன்னாள் தலைவர் அவிக்டர் லைபர்மென் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படும் நிலையில். நெதேன்யாஹூ மீது சுமத்தப்பட்டுள்ள லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு, தன்னிடம் போதுமான ஆதாரம் உள்ளதாக அவிக்டர் தெரிவித்துள்ளார். இது, நெதேன்யாஹூவின் வெற்றிக்கு இது மிகப்பெரிய இடையூராக அமையலாம். ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில்,நெதேன்யாஹூவிற்கு அவிக்டரின் ஆதரவு இல்லாததே இந்த மறு தேர்தலுக்கானக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப்பூர்வமான முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையிலும், இப்போதுல்ல நிலவரப்படி, இருவராலும் இஸ்ரேல் பாராளுமன்றமான நெசட்டில் போதுமான வாக்குகள் பெற்று வெற்றி பெற முடியாத நிலை தொடர்ந்து வருகிறது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close