ரபேல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு 

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2019 08:40 pm
rafal-fighter-jet-handover-to-indian-officials-in-france

இந்திய விமான படைக்கு தேவையான, ரபேல் ரக முதல் போர் விமானம், பிரான்சில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பல்வேறு சோதனைகளுக்குப்பின், இந்த விமானம், நம் நாட்டு விமானப் படையுடன் சேர்க்கப்படும். 

அதிநவீன ரபேல் ரக போர் விமானங்களை வாங்க, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த, டஸால்ட் நிறுவனத்துடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, நம் விமானப்படைக்கு தேவையான அதிநவீன அம்சங்களுடன், புதிய ரக விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக தயாரிக்கப்பட்ட, ரபேல் ரக போர் விமானம் ஒன்று, பிரான்சில் இன்று நம் நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த விமானம், அக்டோபர் 8ம் தேதி முறைப்படி ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்படும். 

அதன் பின் பாதுகாப்பு சோதனைகள், இந்திய தர நிர்ணய கொள்கைகள் படி அனைத்து நடவடிக்கைகளும் முடிந்ததும், 2020ல் இந்த விமானங்கள் நம் விமானப்படையுடன் சேர்க்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close