ஹௌடி மோடியில் பிரதமர் நரேந்திர மோடி

  அபிநயா   | Last Modified : 22 Sep, 2019 12:08 pm
indian-prime-minister-in-howdy-modi

எப்படி இருக்கிறீர்கள் மோடி, நாம் பகிர்ந்துகொண்ட கனவுகள், நம் பிரகாசமான எதிர்காலம்"  என்று பெயரிடப்பட்டுள்ள, அமெரிக்க இந்திய வம்சாவழியினர் நடத்தும்,  "ஹொடி மோடி" நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நேற்றிரவு, அமெரிக்காவிலுள்ள டெக்ஸஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரைச் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

மோடியை சந்திப்பதற்காக, அமெரிக்காவின் பல இடங்களிலிருந்தும், பலூச், சிந்தி மற்றும் பாஷ்தோ இன மக்கள் வந்திருந்தனர். .நேற்றிரவு ஹூஸ்டன் நகரைச் சென்றடைந்த பிரதமர், முதலில் இவர்களை சந்தித்து உரையாடினார். 

மேலும், எரிபொருள் நிறுவனத் தலைவர்களை கண்டு உரையாடிய அவர், இரு நாடுகளின், எரிபொருள் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில், அமெரிக்காவின் எல்.என்.ஜி நிறுவனத்துடன், எரிபொருள் இறக்குமதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இதை தொடர்ந்து, பல இன மக்களையும் மோடி சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இன்று நடக்கவிருக்கும் "ஹொடி மோடி" நிகழ்வில், இந்திய பிரதமருடன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வை தொடர்ந்து, செப் 23., முதல் செப் 27., வரை மோடி நியூயார்க் நகரில் இருக்கப்போவதாகவும், செப் 27., அன்று நடக்கவுள்ள ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில் கலந்துக் கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close