அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி

  அபிநயா   | Last Modified : 22 Sep, 2019 01:12 pm
modi-follows-swachhta-abhiyaan-even-in-us

"ஹௌடி மோடி" நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நேற்றிரவு, அமெரிக்காவிலுள்ள டெக்ஸஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரைச் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை அங்கிருந்த அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

அவரை வரவேற்கும் பொருட்டு, அவர்கள் அளித்த பூங்கொத்திலிருந்த கீழே விழுந்த ஒரு பூவை பிரதமர் தாமாகவே கீழிருந்து எடுத்து தனது பாதுகாவலரிடம் கொடுத்தார். அவரின் இந்த செயல் சுற்றியிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதன் மூலம், அமெரிக்காவிலும் "ஸ்வச் பாரத்" -ஐ கடைபிடிக்கிறார் மோடி என சமூக வளைத்தளங்களில் அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

மேலும், "ஸ்வச் பாரத் அபியான்" - ஐ கடைபிடிக்க வேண்டும் என்றுக் கூறுவதோடு மட்டுமில்லாமல், தானே எடுத்துக்காட்டாக முன்னின்று அதை கடைபிடிக்கும் தலைவர் மோடி என்ற காரணத்தினால், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் நிறுவனம், அவருக்கு "குலோபல் கோல்கீப்பர்ஸ் அவார்ட்"  என்ற விருதை அளித்து பெருமை படுத்த முடிவு செய்துள்ளது.

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close