9/11 தாக்குதல்களுக்கு அல் கொய்தாவிற்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்தது: 2ஆவது முறையாக ஒப்புக்கொண்ட இம்ரான் கான்

  Newstm Desk   | Last Modified : 23 Sep, 2019 10:36 pm
pakistan-trains-al-qaeda-for-9-11-attacks-imran-khan-for-the-second-time-admitted

9/11 பயங்கரவாத தாக்குதல்களுக்கு அல் கொய்தாவைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு ஐஎஸ்ஐ  மற்றும் பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளித்ததாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் இரண்டாவது முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்காவின் சி.எஃப்.ஆர் இல் பேசிய இம்ரான் கான், ‘கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவில் தாக்குதல்கள் நடைபெறுவதற்கு முன்பு, அல் கொய்தா பயங்கரவாதிகள், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்தனர். பயங்கரவாத குழுக்கள் தொடர்பாக அரசாங்கம் தனது கொள்கையை மாற்றியது. ஆனால், ராணுவம் அந்த மாற்றத்திற்கு தயக்கம் காட்டியது’ என்றார்.

பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் அமெரிக்க கடற்படையினரால் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது குறித்து ஏன் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்று இம்ரான் கானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘ நாங்கள் விசாரணை மேற்கொண்டோம். ஆனால், நான் கூறுவேன், பாகிஸ்தான் ராணுவம், ஐ.எஸ்.ஐ, 9/11 க்கு முன்னர் அல்கொய்தாவுக்கு பயிற்சி அளித்தது’ என்று இம்ரான் கான் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஒசாமா தங்கள் நாட்டில் இருப்பதை பாகிஸ்தான் அறிந்திருப்பதாக ஜூலை மாதம் இம்ரான் கான் ஒப்புக் கொண்டார். இந்த நிலையில், கடந்த 3 மாதங்களில் மீண்டும் இரண்டாவது முறையாக இம்ரான் கான் இவ்வாறு ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close