க்சியாவோமி களமிறக்கியுள்ள புதிய ரெட்மி 8A மாடல்

  அபிநயா   | Last Modified : 26 Sep, 2019 01:25 pm
xiaomi-redmi-8a-with-corning-gorilla-glass

க்சியாவோமியின் ரெட்மி, அதன் கைபேசி பட்டியலில் புதிதாக ஒன்றை களமிறக்கியுள்ளது.

இந்த வருட தொடக்கத்தில், க்சியாவோமி, ரெட்மி 7ஏ என்ற மாடலை ரூ.5799 அறிமுகம் செய்தது. பின்னர் முதல் போகோ எப் 1, ரெட்மி கே20 வகைகளை தொடர்ந்து, தற்போது ரெட்மி 8ஏ என்ற கைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னர் வந்த ரெட்மி வகைகளை போல, இந்த வகை ரெட்மி 8ஏ விலும் புகைப்பட கேமரா கைபேசியின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கைபேசியின் கீழே டைப் சி கனெக்ட்டர், ஸ்பீக்கர், மற்றும் டைப் சி ஹெட்போன் ஆகிய அமைப்புகள் பொறுத்தப்பட்டுள்ளன. கைபேசியின் திரை "வாட்டர்ப்ரூப்" ஆக அமைக்கப்பட்டுள்ளது. 

இதன் முக்கிய சிறப்பம்சங்கள் :

6.22 இன்ச் டாட் நாட்ச் ஹெச்டி டிஸ்ப்லே

2ஜிபி ரேம் 32ஜீபி உள் சேமிப்பு

2+1 சிம் ஸ்லாட்

5000எம்ஏஹெச் பேட்டரி மற்றும் வயர்லெஸ் வானொலி அம்சங்கள்.

2ஜிபி/32ஜிபி யின் விலை ரூ. 6,499.

3ஜிபி/32ஜிபி யின் விலை ரூ. 6,999.

இந்தியாவில் இதன் விற்பனை பிலிப்கார்ட், எம்.ஐ.காம், எம்.ஐ.ஹோம் ஸ்டோர்ஸ் மற்றும் எம்.ஐ - ன் எல்லா உறுப்பினர் ஸ்டோர்ஸ்களிலும் வரும் செப் 29 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close