ஒன் ப்ளஸில் புதிதாக களமிறங்கவிருக்கும் 7டீ மற்றும் 7டீ ப்ரோ மாடல் ஸ்மார்ட் போன்கள்

  அபிநயா   | Last Modified : 27 Sep, 2019 11:01 am
one-plus-s-new-7t-and-7t-pro-models

ஒன் ப்ளஸில், ஒன் ப்ளஸ் 7டீ மற்றும் ஒன் ப்ளஸ் 7டீ ப்ரோ என இரண்டு புதிய ஸ்மார்ட் போன்கள் களமிறங்க உள்ளன.

சீனாவின் மிக முக்கிய ஸ்மார்ட் போன் வகைகளில் ஒன்றான ஒன் ப்ளஸ், களமிறக்க போகும் ஒன் ப்ளஸ் 7டீ மற்றும் ஒன் ப்ளஸ் 7டீ ப்ரோ ஆகிய இரண்டின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

புதிதாக ஸ்மார்ட் போன் உபயோகிக்கத் தொடங்குபவர்களுக்கு தோதாக ஒன் ப்ளஸ் 7டீ இருக்கும் என அதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். சாதாரணமாக ஒன் ப்ளஸ் 7 வகை செல்களின் பின் பகுதியில் காணப்படும் பானலில் உண்டாகும் மிரர் பினிஷ் வகை பானல், புதிதாக மாற்றியமைக்கப்பட்ட ஒன் ப்ளஸ் 7டீ யில் அமைக்கப்படவில்லை. பிற்பகுதியில் காணப்படும் கேமிராவிலும் ஒரு சில மாற்றங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

ஒன் ப்ளஸ் 7டீ யின் சிறப்பம்சங்கள் :

ட்ரிப்பில் ஹரிசாண்டல் லென்ஸ் மாட்யூல்

3 கேமிரா மற்றும் எல்.ஈ.டி அமைப்பு

தட்டையான நடுபுறம்

கர்வ்டு கார்னர்ஸ்

ஒன் ப்ளஸ் 7 வகை செல்களுடன் ஒப்பிடும் போது பெரிதாக மாற்றங்கள் இல்லை எனினும் இந்திய மார்க்கெட்டில் 7டீ வகைகள் விற்கபடுமா என்பதும், அதன் விலையும் இனி தீர்மானிக்கப் படவில்லை.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close