சுலபமாக வர்த்தகம் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யா, சீனாவை பின்னுக்குத்தள்ளி முன்னேறிய இந்தியா

  அபிநயா   | Last Modified : 29 Sep, 2019 12:41 pm
india-beats-russia-china-in-ease-of-doing-business-index

சுலபமாக வர்த்தகம் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில், சீனா மற்றும்  ரஷ்யா ஆகிய நாடுகளை பின்னுக்குத்தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது என்று ஹார்வேர்டு பிஸினெஸ் ரிவ்யூ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஹார்வார்ட் பிசினெஸ் ரிவ்யூ என்ற நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக  சுலபமாக வர்த்தகம் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. வர்த்தகம் சுலபமாக நடைபெறும் நாடுகள், வர்த்தகத்தில் கடுமையான சூழலை சந்திக்கும் நாடுகள் என பட்டியலிடுவதன் மூலம் வர்த்தகத்தில் முன்னேற்றம் காணும் நாடுகளை மிக சுலபமாக அடையாளம் காண இயலும். டிஜிட்டல் அனலாக் அடித்தளங்கள், தகவல் பரிமாற்றங்கள், இ-காமர்ஸ், இணையதள வர்த்தகம் என மேலும் சில அடிப்படையான காரணிகளை கொண்டே இந்த பட்டியலை ஹார்வார்ட் பிசினெஸ் ரிவ்யூ நிறுவனம் வெளியிடுகிறது.

42 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில், 1.96 புள்ளிகள் பெற்று ரஷ்யா 42வது இடத்திலும், 2.14 புள்ளிகள் பெற்று  சீனா 39வது இடத்திலும், 2.17 புள்ளிகள் பெற்று இந்தியா 38வது இடத்திலும் இருக்கிறது. முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இங்கிலாந்தும், சிங்கப்பூர் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற முதல் 5 வருடங்களிலேயே, உலக வங்கியின் சுலபமாக வர்த்தகம் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மிகப் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் இந்தியா 53 நாடுகளை கடந்து பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close