பயங்கரவாதத்தை ஒழித்திட இந்தியாவிற்கு முழு ஆதரவு: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உறுதி!!

  அபிநயா   | Last Modified : 04 Oct, 2019 12:16 pm
narendra-modi-and-sheikh-hasina-s-zero-tolerance-against-violence-and-terrorism

பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழித்திட வேண்டும் என்றும் இதில் இந்தியாவின் நடவடிக்கைக்கு என் முழு ஆதரவு உண்டு என்றும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்துள்ளார்.

74வது ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில் கலந்து கொண்ட வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, "பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு  வர உலக நாடுகள் அனைத்தும் தேவையான முயற்சிகள் எடுக்க வேண்டும். இதற்காக இந்தியா எடுக்கும் முயற்சிக்கு எனது ஆதரவு எப்போதுமே இருக்கும்" என்று  ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.

மேலும், இரு நாடுகளின் பொருளாதார நிலை, வர்த்தகம், பருவநிலை மாற்றம், வறுமை ஒழிப்பு போன்ற முக்கிய பிரச்சனைகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும், இருதலைவர்களும் கலந்துரையாடியதாக தகவல்கள் கூறுகின்றன. கடல் மற்றும் வான் வழி தாக்குதல்களும், அந்த நேரத்திற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர்களது உரையாடல் அமைந்தததாக கூறப்படுகின்றது.

இந்திய வங்கதேச நாடுகளுக்கான நட்பை உலகுக்கு உணர்த்தும் வகையில், வங்கதேச பிரதமர், இந்திய பிரதமரை தங்கள் நாட்டிற்கு வருமாறு அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close