ஓசி விமானத்தை பயன்படுத்தும் இம்ரான் கான்: ராஜ்நாத் சிங் கிண்டல்

  அபிநயா   | Last Modified : 05 Oct, 2019 01:28 pm
pakistan-s-imran-khan-struggles-to-arrange-separate-aircraft-for-his-trip-to-newyork-rajnath-singh

சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமருக்கு, ஒரு தனி விமானம் கூட ஏற்பாடு செய்ய முடியாத அளவு, பாகிஸ்தானின் பொருளாதாரம் பரிதாபமான நிலையில் உள்ளது என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கேலி செய்துள்ளார்.

கடந்த மாதம், செப் 27., அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க பயணம் மேற்கொண்ட இம்ரான் கானை, சவுதி இளவரசர் தனது சிறப்பு விமானத்தில் அனுப்பி வைத்தார் என்ற செய்தி வெளியானதை தொடர்ந்து, பலரும், பாகிஸ்தானின் இயலாமையை காரணம் காட்டி கேலி செய்து வந்தனர். இதை தொடர்ந்து, பாதுகாப்புத்துறையின் நிலழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ராஜநாத் சிங், "பாகிஸ்தானின் பொருளாதாரம் எந்த அளவு வீழ்ச்சியடைந்து இருக்கிறது என்பதற்கு, பிரதமர் இம்ரான் கான் எவ்வாறு  அமெரிக்கா சென்றடைந்தார் என்ற ஒரு எடுத்துக்காட்டே போதும் என நான் நினைக்கிறேன். சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமருக்கு, ஒரு தனி விமானம் கூட ஏற்பாடு செய்ய முடியாத அளவு, பாகிஸ்தானின் பொருளாதாரம் பரிதாபமான நிலையை எட்டியுள்ளது. பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, மதத்தின் பேரில் இந்துக்கள் மீதான வன்முறை, பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் சந்தேக பட்டியலில் வைத்திருப்பு, என அனைத்து தரப்பினரும் குற்றம் சுமத்தும் வகையில் பாகிஸ்தானின் செயல்கள் இருக்கின்றன" என பாகிஸ்தானின் செயல்கள் குறித்து குற்றம் சுமத்தியுள்ளார்.

அமெரிக்காவின்  நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன், பணிகள் நிமித்தமாக, இம்ரான் கான், சவுதி அரேபியா சென்றிருந்ததாகவும், அங்கிருந்து நியூயார்க் செல்லவிருந்த அவரை, சவுதி இளவரசர் முஹமது பின் சல்மான் தனது சொந்த விமானத்தில் அமெரிக்கா அனுப்பி வைத்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close