வெளிநாட்டு ஆண்கள், பெண்கள் ஒரே அறையில் தங்க சவுதி அரசு அனுமதி!!

  Newstm Desk   | Last Modified : 05 Oct, 2019 02:40 pm
saudi-arabia-allows-foreign-men-and-women-to-share-hotel-rooms

விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் வெளிநாட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக ஹோட்டல் அறைகளில் தங்க சவுதி அரசு அனுமதியளித்துள்ளது. 

சவுதியில் சுற்றுலாத் துறையை வளர்க்கவும், எண்ணெய் ஏற்றுமதியிலிருந்து அதன் பொருளாதாரத்தை பன்முகப்படுத்தவும், சவுதி  இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக கடந்த வாரம் 49 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் சவுதிக்கு வருவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி அனுமதியளித்தது. மேலும், சவுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கருப்பு நிற முழு ஆடையை அணிய அவசியம் இல்லை என்றும் அதே நேரம் அனைவரும் அடக்கமாக உடை அணிய வேண்டும் எனவும் தெரிவித்தது. 

சமீபத்தில், வெளிநாட்டினர் உட்பட தொடர்பில்லாத ஆண்களும், பெண்களும் பொது இடங்களில் சந்தித்தால் கடுமையாக தண்டிக்கப்படுவதற்கான சட்டத்தை சவுதி அரசு தளர்த்தியுள்ளது. 

இந்நிலையில், சுற்றுலா மற்றும் தேசிய பாரம்பரியத்திற்கான சவுதி ஆணையம் அரவு மொழி செய்திதாள் ஒன்றில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில், ஹோட்டலில் தங்கியிரும் அனைத்து சவுதி நாட்டினரும் சோதனையின் போது தங்களது குடும்ப அடையாள அட்டை அல்லது உறவிற்கான சான்றை காட்ட வேண்டும். அதேநேரத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு இது தேவையில்லை. அதேபோல் சவுதி உட்பட அனைத்து பெண்களும் தங்களது அடையாள அட்டையை காண்பித்து ஹோட்டல்களில் தனியாக முன்பதிவு செய்து தனியாக தங்கிகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருமணமாகாத வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் சவுதியில் ஒன்றாக அறை எடுத்து தங்குவதற்கு எந்த சட்ட தடைகளும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.  

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close